என் கணவன்
ஆறு நான்கு வருடம் கடந்த பின்பு
அறுபது வருடம் வரை தொடரும் உறவு.....
கண்கள் கொண்டு உறவாடிய பின்பு
வார்த்தைகளின் தேவை குறைவு.....
என் தெய்வங்கள் கொண்டு சேர்த்த உன்னை
தெய்வமாய் நினைத்து வணங்கிடும் மனது ....!!
காலங்கள் உன்னோடு கடந்திட தானோ
என் கணங்கள் இங்கு உன்னை நாடுதோ....
கைகள் கோர்த்து நாம் போக
கண்கள் பேசிடும் கதைகள் கேட்க நீளும் பாதைகள் .....
காதல் சேர்த்த உறவில்லை என்றாலும்
உன் உறவில் கண்டேன் காதலை ....
கணவனாய்...
காவலனாய்....
கள்வனாய்....
காதலனாய்....
கொண்டேன் காதலை..!!

