வலியோடு வெற்றி

வலியோடு வெற்றி
தாரமங்கலம் வளவன்

செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு ஒரு வலி தான்.
சாதாரண வலி அல்ல. மரண வலி.
இதில் சில சமயம் நான் மடியலாம்.
மடிவதே ஆனாலும்
கழிவுகளை அகற்றியே ஆக வேண்டும்.
நான் மடியாமல் வேலை முடிக்கப் பட்டால்
எனக்கு வருமே வெற்றிப் புன்னகை.
உயிரைப் பணயம் வைத்து மனிதக் கழிவுகளை அகற்றும்
எனது தொழிலை நான் சரியாக செய்கிறேன்
அதில் கேவலம் ஏதுமில்லை.
அது சரி..
மனிதக் கூட்டத்தில் கலந்துள்ள அனைத்து
சமூக விரோதிகளையும் சரியாக கண்டறிந்து
நீங்கள் சிறைக்கு அனுப்பி விட்டீர்களா

எழுதியவர் : தாரமங்கலம் வளவன் (30-Apr-16, 8:01 am)
Tanglish : valiyodu vettri
பார்வை : 2259

மேலே