எதற்கு பயம்

உனது
இன்றைய நிகழ்ச்சியில்
எனக்கு அழைப்பில்லை
பெரியோர் பலபேர்
இருக்கையில்
விடுபட்டது வருத்தமில்லை
நான் முக்கியமில்லையென்பதை
நீயும், நானும் அறிவோம்

என்றாவது ஒரு நாள்
எனைத் தேடி
நிச்சயம் வருவாய்
அன்று உன் அழைப்பை ஏற்று
ஏதும் சொல்லாமல்
உண்மை உணர்ந்து
உன்னுடன் வருவேன்
எனை நம்பு

இருந்தாலும்
உடலும், உள்ளமும்
உண்மையை சொல்கிறது
அவ்வளவு சீக்கிரம்
நடக்காதென--நம்மை
மரணம் மதிக்காதபோது
அதனிடம் எதற்கு பயம்?

எழுதியவர் : கோ.கணபதி (30-Apr-16, 10:10 am)
Tanglish : etharkku bayam
பார்வை : 56

மேலே