தினம் ஒரு பாட்டு தத்துவம் - 6 = 91

இந்தியா ஈஸ் எ எங்க கண்ட்றி
இதுல ஏழை ஜாதிகள் கதியின்றி
தினம் வாழ்க்கையோடு போராட்டம்
பணம் பத்தாததால் படு திண்டாட்டம்..!

தட் ஈஸ் மை மாரியாத்தா – உங்க
குட்டீஸ்ங்க குறையை தீராத்தா…!
மெட்ராஸ் முழுக்க உன் சன்னதியில்
ஆடி மாசத்தில் அம்மன் கூழாத்தா….!

ஐ ஆம் எ அஜாரூ ! – நான்
பொழைக்க வந்தேன் பர்மா பஜாரூ..!
பஜாருல உஜாரு இல்லன்னா
நிஜார கழட்டிடுவான் படு பேஜாரு !

மை நேமிஸ் மார்த்தாண்டம்
வேலைக்கு எனக்கு திண்டாட்டம்
வேலை கெடைச்சா கொண்டாட்டம்
அலையாட்டம் உழைப்பேன் அன்றாடம் !

வாட் இஸ் திஸ் தீம்பாயி ?
ஆபிஸோடு உனக்கேன் லடாயி ?
அட்ஜஸ்ட் டைப்பா நீ மாறி –
அசத்தினா ஆயிரம் உன் பின்னாடி..!

திஸ் இஸ் மை பெஸ்ட்ப்ரண்டு!
இவரு பிஸ்க்கட் வித்து உசந்தாரு
மஸ்த்தான் சாகிபு மைனரு! இவரு
மஸ்க்கட் எண்ணை கிணறு ஓனரு !

இட் இஸ் என்ட்ரன்ஸ் எக்ஜாமூ- இதுல
கட்ஆப் மார்க்கே பெஸ்ட் பெர்ப்பாமூ !
நினைச்ச காலேஜில எடம் கெடைச்சாலும்
அச்சடித்த கரன்சிதான் இம்ப்பார்ட்டனு !

கோயிங் டுத கோவிந்தா
அரகர அரகர கோவிந்தா !
கம்மிங் டுத ஆனந்தா,
படிப்புல இருந்து எங்களை
காப்பாத்து காப்பாத்து பரமானந்தா !

எழுதியவர் : சாய்மாறன் (30-Apr-16, 8:20 pm)
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே