வலியோடு வெற்றி --போட்டிக் கவிதை--முஹம்மத் ஸர்பான்

கடலோடு அசையும் அலையாய் ஓடங்கள்
மணலோடு தவழும் நத்தையாய் பாதங்கள்
கண்ணோடு கண்ணீராய் சிந்திடும் உதிரங்கள்
நெஞ்சோடும் சுவாசமாய் வாழும் காயங்கள்

உலகின் மேடையில் உழைப்பு நாடகங்களா?
எழுதிடும் கவிஞன் கருணை உள்ள கடவுளா?
மண்வெட்டி கூர்மை பட்டு வலித்திடும் சதையில்
மண் புழு தவழும் ஈர மண்ணும் மருந்தாகிறது.

எங்கள் உலகில் பாழடைந்த வீடும் சுவர்க்கம்
அங்கே வலை பின்னும் சிலந்தியும் சாட்சியாகும்
ஆடை தேவையில்லை என்புகளுக்கு சதையுண்டு
யாசகம் கேட்கவில்லை உழைப்பைத்தான் கேட்கிறோம்

உழைப்பாளி நெஞ்சம் பூ போன்றதாய் பூத்தது
ஆதலால் அவன் உரிமை போராட்டம் செய்யவில்லை
முதலாளி நெஞ்சம் சிலுவை ஏந்திய தோட்டம்
ஆதால் அவனுக்கு உதிரமும் வியர்வையாய் தெரிகிறது.

செல்கள் விற்கும் சந்தையில் பிணையாகும் உடல்கள்
மண்வெட்டி கோடரி இருந்தும் பசுமையை தொலைத்தது
வீட்டுக்கு வீடு நாளிதழ் போடும் குடும்பச்சுமையில்
உழைப்பை கற்றே சரித்திரம் ஒன்று வானில் பறந்தது,


உலக வாழ் தொழிலாளர் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-May-16, 7:41 am)
பார்வை : 140

மேலே