அறிகுறிகள்

தானாய் சிறியதாய் புன்னகை

மணிகணக்கில் அலங்காரம்

மனதில் தடுமாற்றம்

நேரில் பேச ஒத்திகை கண்ணாடி முன்னால்

எண்ணங்கள் சிறகடிக்க

பூமியில் நான் மட்டும் இருப்பதாய் மிதப்பு

இவை அனைத்தும் என்னுள் நீ வந்ததற்கான

அறிகுறிகளோ?

எழுதியவர் : (20-Jun-11, 12:49 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 300

மேலே