வலியோடு வெற்றி
கடுகிலும் சிறியவன் நான்
கடித்து புசிக்க தரமின்றி புதைந்தேனோ?
காற்றும் மழையும் ஊடுருவி எனைதழுவ
கானகத்தின் அரசனாக மண்ணை முட்டி விண்ணுயர்ந்து விரிந்து நிற்கிறேன்..
ஆம் ஆலம்பழ விதை நான்!
உணர்வில்லா உடமை என்ற உதாசீனமா?
உளி தந்த வலிதனை உள்வாங்கி உனக்கே கடவுலானேன்...
உண்மைதான் நான் கல்லேதான்!
உள்ளுக்குள்ளே சிறைபட்டு புழுங்கிய புழுதான்?
உடைக்க வலி பொறுத்து சிறகை விரித்தேன் ...
உயரப்பறக்கிறேன் வண்ணம் கொண்ட பூச்சி நான்!
பிறர் வழி நடப்பவர்க்கு தெரியாது வெற்றி வழி?
தன்னம்பிக்கையுடன் தன்வழி நடப்பவர்கே தெரியும் வெற்றியின் வலி...
வழி சொல்வதல்ல வெற்றி?
வலி தருவதே வெற்றி நன்னெஞ்சே...
வலியோடுதான் வெற்றி!