இதயவலி கூடுதே கூடு விட்டு கூடு பாய முற்படுதே
உலகில் அதிக பேருக்கு
வருவது பல்வலி தான்
ஆனால் எனக்கோ
இதயவலி தான் எப்பொழுதும்
அதிகமாக
பயன்படுத்துவதற்கே
வலி கூடும்
அப்படி பார்க்கையில்
நான் அதிகம்
உபயோகிப்பது
என் இதயத்தை
உன்னை நினைத்து கொண்டே
இருக்க சொல்லி
ஆனால்
இந்த சிறு இதயத்தால்
உன்னை முழுவதும் நிரப்பி வைக்கமுடியவில்லை
இதயம் வெடிக்கிறது
இதயம் வலிக்கிறது
இதயம் அடைக்கிறது
இதயம் துடிப்பது
உன்னால்
இதயம் ஓடுவது
உனக்காக
இதயம் வலிப்பது
என்னில்
உன் பிரிவால்
இதயம் வெடிக்கிறது
உன் பிரிவில்
துடிக்கிறது
உன் வரவில்
~ பிரபாவதி வீரமுத்து