மே தின விழா

மே தின விழா

மேதினம் மேதினம் மேதினில்
மேதினில் மேதினம் வளம்பெறவே
மேதகு வாழ்வினைப் பெற்றிடவே
மேதினத்தை நாம் கொண்டாடிடுவோம்!...

தொழிலாளர் ஒற்றுமை ஓங்கிடவே
தொழிலாளர்இரத்தம் புனல்போல் ஓடிடவே
போராடிப்பெற்ற நல் உரிமைகளை
போற்றிப் புகழ்ந்திட கொண்டாடிடுவோம்!...

முதலாளி தொழிலின் தலையாகும்
தொழிலாளி அதனின் உடலாகும்
தொழிலாளர் உழைப்பது உயிராகும்
அனைத்தும் கொண்டதுவே மனிதத்தொழிலாகும்!...

நித்தம்நித்தம் தம்தம்தம்தம் உழைப்பினையே
தத்தம்தத்தம் என எண்ணிடாமல்
சொந்தமென அந் நிறுவனத்தையே
சேர்ந்திங்கு உழைத்து உயர்த்தினரே!...

உயர்ந்ததினால் இலாபம்கண்ட நிறுவனங்களும்
விலைவாசி உயர்வினை மனதில்கொண்டு
பாடுபடும் தொழிலார்கள் பாரம்போக்கிடவே
உயர்ந்ததொரு பணிக்கொள்கையினை பெற்றிடுங்கள்!...

தொழிலாளர் வாழ்வினை உயர்த்திடுங்கள்
தொழிலாளி குடும்பத்தினரையும் மனதில்கொண்டு
தொழிலில் வளர்ச்சி நாளும்பெற்றிடவே
தொழிலாளர் தினத்தினைக் கொண்டாடிடுவோம்!...

மே தின வாழ்த்துகளுடன்

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (1-May-16, 5:01 pm)
பார்வை : 78

மேலே