தினம் மே தினமே

தினமே தினமே தினம் மேதினமே
தினமும் இவர்தாம் பெறணும் நலமே
நலமும் கூட வளமும் கூட‌
இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி கூட‌
இது சாத்தியமே இது சத்தியமே
உலகம் கொடுக்க வேண்டும் பெலமே
உழைக்கும் உழைப்பு வயிற்றை நிரப்பும்
கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்வைக் கூட்டும்
சுரண்டும் கூட்டம் திருந்தும் நாளே
உழைக்கும் வர்க்கம் வாழ்வில் சொர்க்கம்
பணமோ இவர்க்கு தூர இருக்கும்
மனமே மகிழ அதுவே போதும்
பூமி செய்யவும் உழைப்பாளி தேவை
சாமி செய்யவும் உழைப்பாளி தேவை
அவன் தேவையை செய்திடுவோர் தேவை
அவருக்கு வாழ்நாளெல்லாம் செய்திடுவான் சேவை

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-May-16, 5:58 pm)
பார்வை : 5607

மேலே