மே 1
உழைப்பில்லாமல் ஊதியம் இல்லை
உழைத்தவனுக்கு
ஊதியம் தந்திடு
உழவன்
நம் கடவுள்
நண்பனை போல்
நடத்திடு
நாளும்
வரும் நாளையும்
உழைக்கும் வர்க்கம்
உள்ளத்தில் வியர்வை
உதிரத்தில் வேட்கை
புரியாத புதிராய்
நயவஞ்சகர் கூட்டம்
உழைத்த கூட்டத்தின்
சோற்றை வெடுக்கென
பிடுங்கும்
தரகர்கள்
அரக்கர்கள்
இல்லா உலகம் வேண்டும்
அனைவருக்கும்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.....
~ பிரபாவதி வீரமுத்து