என் பாட்டாளி

விளைந்த வயல்கள் சொல்லும்
விதைத்தவன் பெருமை...
கலைந்த முகம் சொல்லும்
உழைத்தவன் பெருமை...
வெண்ணிற ஆடைகள் சொல்லும்
வெளுத்தவன் பெருமை...

சோலையில், சாலையில், ஆலையில்
சிந்திய துளிகள் சொல்லும்
அவன் பெருமை...

கண்ணீர்த் துளியில் கவலை ...
வியர்வைத் துளியில் விளைச்சல்...
உதிரத் துளியில் உழைப்பு...
அவன் மெலிந்த தேகமும் சொல்லும்
உழைப்பின் பெருமை......

அறுத்துக் கொடுத்தவன்
அடி வயிற்றை சுருக்குகிறான்...
அடுக்குமாடி கட்டித் தந்தவன்
அடுத்த நேரம்
கோனியில் தலை சாய்கிறான்...
பட்டவனுக்கு சொந்தமில்லை
பார்த்தவனே வசந்தமாய் வசிக்கிறான்......

பசியும், பஞ்சமும் தான்
பாடுப்பட்டு உழைக்கும்
அந்த பாட்டாளிக்கே சொந்தமோ?..


அவனையே... தான்
வறுமையும் வா... வா... என்கின்றது....
செழுமையும் செல் என்கின்றது....


செத்து செத்துதான் பிழைக்கிறான்
சாகும் வரையிலும் உழைக்கிறான்
என் பாட்டாளி......
உழைப்பின் கூட்டாளி.....

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-16, 3:49 pm)
Tanglish : en pattaali
பார்வை : 175

மேலே