சுழி
பொய்யான தேகத்திற்கு,
மெய்யென பெயரிட்டது யார்?
என் மெய் எங்கோ இருக்க...
மெய்(உடல்) இங்கே இருக்க...
பொய்யான மெய்யினுள்,
மெய்யான மெய்யினை-
பெற்றுவிட தவிக்கும்...
மானங்கெட்ட பெருமனம்...
எங்கெங்கோ அலைய,
நின் விழி காட்டும்,
வழியில்லா வழியிருந்தும்,
வலிகளுடன் கலிகடக்கும்...
என் சுழியை சுட்டெரி....