படித்ததில் பிடித்த தத்துவங்கள்

1) சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே நிம்மதியாக வாழ முயற்சி செய்
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

2) மிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது....
மிகவும் சந்தோஷமான விஷயம்...உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...

3) ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச்
சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

4) நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்.....

5) "இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை..

6) தேவையில்லாததையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால்....
தேவையானதையெல்லாம் விற்க வேண்டி வரும்.......

7) வெற்றி - உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
தோல்வி - போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி - நீ யாரென்று உனக்கே காட்டும்...

8) நமது மனஉறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கபடிதான் நமது வெற்றியின் அளவும் இருக்கும்....

9) துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்...

10 ) பொறுமையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும்,
சகிப்புத் தன்மையும், தெளிவான சிந்தனையும் இருந்தால்..
வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்....!

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 2:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 236

மேலே