அவன்
![](https://eluthu.com/images/loading.gif)
அவன்...
என் உயிரின் மறுபாதி...
என் மனதின் கண்ணாடி...!
என் முதல்
Good morning க்கும்...
கடைசி
Good night க்கும்
சொந்தக்காரன்...!
தொலைவினில்
அவன் இருந்தால் ...
என் இதயமும் படபடக்கும்...
அனுதினமும் அவன் அருகாமையை
என் மனமும் நாடும்...!
சில நொடி
அவன் மௌனம் கொண்டால்
மனதில் ஒரு பிரளயமே நேரும்...!
அருகினில் அவனிருப்பான்
நானும் உடனிருப்பேன்...
மொழிகள் அங்கிருக்காது...!
ஆயிரம் வார்த்தை
நான் பேச
அமைதியாய் அமர்ந்திருப்பான்
என்னை ரசித்தபடி...!
அவனிடம் மட்டும் தான்
சிரித்துக்கொண்டே அழமுடியும்....
அழுதுக்கொண்டே சிரிக்கவும்முடியும்...!
என்ன பிடிக்கும் என கேட்பான்...
கதைகதையாய் நான் சொல்ல...
கடைசியாய் சொல்லுவான்
"நீ ஒரு லூஸூ" ன்னு ...!
பக்கத்துல உட்காந்து
என் எச்சில் மிட்டாயையும்
எண்ணக்குவியலையும் ...
ஒண்ணா பகிர்ந்துக்குவான்...!
அழகா நான் இல்லாட்டியும்...
"என் அழகி நீ தான் " ன்னு
தினமும் சொல்லுவான்...!
கோபமாய் நான் சண்டைபோட...
செல்லக்குட்டினு...
ஒரு வார்த்தை அவன் சொல்ல
கோபம் கூட பறந்துபோகும்...!
கோபமே உனக்கு வராதானு
நான் கேட்க...
"என் குழந்தை நீ"ன்னு
கொஞ்சுறான்...!
நான் என்ன செஞ்சாலும்
சிரிச்சுகிட்டே அவன் இருப்பான்..
சாகதோணுதுனு நான் சொன்னா
சட்டுன்னு அவன் அழுவான்...!
தினம் நூறு சண்டை போடுவோம்..
போட்டி போட்டு தோற்கிறோம்...
எங்க அன்பும் இங்கே வளருது
மனசும் இங்கே சிரிக்குது..!
உண்மையாய நேசிக்கிறோம்...
ஊரும் எங்களை புரிஞ்சுக்கல...
யாரும் பிரிக்கும் முன்
நாங்களே பிரிஞ்சுகிறோம்...
காதலை வாழ வைக்க...!
கடைசி வரை ..
அவன் நெனப்போட ...
எங்காதலும் வாழட்டும்...!
- கீதா பரமன்.
( கலப்பின திருமணங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தின் காதல் நிதர்சனங்கள்...)