உழவர்- உழவர் வாழ்க்கை நிலை

வான மழையிலும்,
பூமி சேற்றிலும் எங்கள் வாழ்க்கை.
வருடம் முழுதும் உழைத்தாலும்
ஓயாது எங்கள் யாக்கை.

குயிலின் கீதமும், மயிலின் அகவலும்
எங்கள் இன்னிசை.
மாட்டின் அழைப்பும் , வயலின் நீரொலியும்
எங்கள் மண்ணிசை.

ஆட்டு கூட்டமும் , மாட்டு கூட்டமும்
எங்கள் தோழர்.
ஒரு தட்டில் உண்டிடும்
நாயும் பூனையும் எங்கள் காவல்.

தினம் வானம் பார்க்கும்
கூரைவீடு எங்கள் சொர்க்கம்.
எங்கள் உடலை கழுவும்
வேர்வைநிலமே எங்கள் சொந்தம்.

நின்று பெய்திடும் வான்மழை
எங்கள் தாய்.
அது வந்துவிட்டால தீரும்
எங்கள் வறுமை நோய்.

வளர்பயிரின் வாசம்
என்றும் எங்கள் நேசம்.
அந்த நேச மகிழ்ச்சியிலே
தொடங்கும் எங்கள் சுவாசம்.

பாட்டன் உழுத கலப்பை
எங்கள் தெய்வம்.
அவர்கள் தந்த உழைப்பும்
மரபணுவும் எங்கள் தெய்வம்.

சிறு பயிருக்கு நீரில்லை
என்றாலும் நிதம் முயல்வோம்.
கண்ணீரில் உப்பை பிரித்தெடுத்தே
நீரை தந்து தினம் மகிழ்வோம்.

எங்கள் குடும்பம்
நோயில் இருந்தாலும்
பயிரை நோயில் விடமாட்டோம்.
எங்கள் உயிர்கள்
அழிந்து போனாலும்
வயலில் உரமாய் கலந்திருப்போம்
பயிர்க்கு தாயாய் தாலாட்ட
காற்றின் உயிராய் கலந்திருப்போம்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (3-May-16, 6:59 pm)
பார்வை : 2754

மேலே