மாயமோ பெரும் நோயோ
![](https://eluthu.com/images/loading.gif)
தூக்கம் அரைகுறை ஆனது
கனவு முழுநீளம் ஆனது
படிப்பு பாதிநேரம் ஆனது
ஜன்னலோரம் மீதிநேரம் போனது
தனிமை இனிமை ஆனது
வெறுமை சுகமாய் போனது
காற்றில் விரல்நுனி வரைந்தது
சோற்றில் கைவிரல் அலைந்தது
கண்ணாடி பிம்பம் அழகானது
மனதின் எண்ணம் கவிதையானது
இது என்ன மாயமோ?
இல்லை பெரும் நோயோ?