யோவ்…
கல்யாணவீட்டு பந்தியில் முருகேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அங்கே நடமாடிக்கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்து, “ இந்தாய்யா, கொஞ்சம் சாம்பார் கொண்டுவா…” என்றார்…
அதற்கு அவர், “ யோவ்… யாரைப் பாத்து சாம்பார் கொண்டுவாங்கிறே? என்னைப் பாத்தா சர்வர் மாதிரி இருக்கா?
முருகேசு : ஓ சாரி சார். நீங்க அந்தப்பக்கம் நின்னதனால சர்வர்ன்னு நெனைச்சிட்டேன். இங்கே என் பக்கத்துல எடம் இருக்கே… வந்து உக்காருங்களேன்… என்றார் சமாதானமாக.
அவர் : யோவ்…. உனக்கு அறிவு இருக்கா? நான் வந்து உன் பக்கத்துல உக்காந்துட்டா யாரு இலை எடுக்கறதாம்?