உழவு
விவசாயம் விழுந்துவிடும் அபாயம்
கணினி மீது இருக்கும் கவனம்
காணி நிலத்தின் மீது தினமும் வரணும்
வயல்வெளிகள் எல்லாமே வீடுகள் கட்டிவிட்டால்
வாய்கரிசிகாக கூட கையேந்தும் நிலைமை வரும்
அரிசிவிலை அதிகம் என என்னும் நெஞ்சம்
தங்கம் விலையை அரிசி விலை மிஞ்சும்
சேற்றில் கைவைக்க ஆள் இல்லை இங்கே
நாளை சோற்றில் கைவைக்க
வயல்வரப்புகள் எங்கே ???
உனக்கு இன்று உண்டு உணவு
நாளை உணவு வெறும் பகல் கனவு
கணினி கண்ட அறிவு
விவசாயத்தை பேணிகாக்க ஆளின்றி
ஏற்பட்ட சரிவு ......
கணினி ஆளும் உலகம்
வேண்டாம் அந்த நரகம்
காணி நிலத்தை நாளை இந்த உலகம் தேடுமே
பசி என்னும் நோயாள நாளை உலகம் வாடுமே
உயிரின் விலையறியா மனிதா
உன் உயிரை விட கணினி என்ன பெரிதா
கால்வாயிற்று கஞ்சிக்காக கையேந்தும் துயரம்
நாளை தலைமுறை வரை தொடரும் இந்த அவலம்
என் தோழா ...
இன்றே கவலை கொள்ளடா
விவசாயம் முக்கியம் என்று எண்ணுடா ???