என் ஆருயிரே

கண்கள் கண்ட கனவுயின்று
பொய்யாகிப் போனதே...
கதைப் பேசிய நிமிடங்கள்
கானலாகி மறையுதே...
காதல் மொழிப் பேசும்
இரு அதரங்களும்
கணைத் தொடுத்துப் போகுதே...
கண்களும் நீராய் ஆனதே.....


முட்டி முளைத்தக் காதல்
எட்டிப் பார்த்து
துளிர் விட்டதும்
வேரைப் பிடுங்குவதாய் நீ
இதயத்தையே
வெட்டி எடுப்பது முறையோ?.....


குருதியில் நனைந்து
குளிர் தாங்காது நடுங்குமென
இதயத்திற்கு
தீ வைப்பதும் சரியோ?.....


நாளைய உதயத்தை
என் இதயம் பார்க்குமோ?...
இன்றைய உதயத்தோடு
அஸ்தமனமாகுமோ?...
தாளாத சோகத்தில்
எனை நீராட விட்டாயே......


விருப்பம் கொண்டு தானே
உன் விரல்களை
என் விரல்களோடு இணைத்தாய்...
தேகம் பிரியாத நிழலாய்
என்னோடு பயணித்தாய்...
முடிந்தது விளையாட்டு
விலகென்று
என் விரல்களை விடுத்து
தனிமையில்
தலைக்கோத அலைந்திடச் செய்தல்
உன் தருமமோ?.....


காதலில்
நித்தம் ஒரு முத்தம்
நீ தந்தாய்...
உன் இதழ் பதித்த
இடங்கள்
என் இரத்தத் துளிகள்.....


வேதம் அல்லாத உலகில்
பேதம் இல்லாத உறவில்
என்னையுண்ட
காதல் நோயினை
ஏற்றும்
விரும்பாத உன்னை
விரும்பமாட்டேன்...
ஆனாலும்
உன்னை வெறுக்கமாட்டேன்.....

எழுதியவர் : இதயம் விஜய் (4-May-16, 9:10 pm)
Tanglish : en aaruyire
பார்வை : 370

மேலே