வலியுடன் சொல்கிறேன்

தள்ளி நிற்கும் வெள்ளி நிலவே
நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் உன்னைக் காணாமல் !

ஒதுங்கப் பார்க்கும் ஓவிய அழகே
நான் உடைந்துப் போயிருக்கிறேன் உன் அழகை காணாமல் !

அன்பு காட்டி அரவணைத்த அதிசய மலரே
நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பை காணாமல் !

சிரித்து சிரித்து செல்லமாக பேசிய
செல்லக் குரலே
நான் யாரிடமும் பேசாமல் ஒதிங்கிவிட்டேன்
தனியறையில் அடைந்து தேடிக்கொண்டிருக்கிறேன் உன் சிரிப்பினை காணாமல் !

அக்கறைக் காட்டி இணைத்திருந்த என் இதயமே
நீ இக்கரை சேர்வையென காத்திருக்கிறேன் நம் உண்மைக் காதலுடன் உனக்காக .


படைப்பு :-
Ravisrm

இவ்வுலகில் நான் நேசிக்கும் முதலும் கடைசியும் உயிர் என்னவள் மட்டுமே

என்னுடைய வாழ்வில் நான் பலவித படைப்பை எழுதி இருக்கிறேன் இந்த 1000மாவது படைப்பு மிக முக்கியமான ஒன்று உண்மையான ஒன்று வேதனையுடன் சமர்பிக்கிறேன்.

எழுதியவர் : ரவி.சு (4-May-16, 7:34 pm)
Tanglish : valiyudan solgiren
பார்வை : 943

மேலே