நீயும் நானும் ஒன்றே--முஹம்மத் ஸர்பான்

பனிமலைகள் சில நிமிடத்தில்
உருகி முடிந்து விடும் ஆனால்
அவளை எண்ணி வாழும் என்
மனம் உருகி முடிவது இல்லை

அவளே! உருவகம் உவமைகள்
கலந்த கடவுளின் இலக்கணம்
அவளுக்கு எந்த மொழியில்
நான் வருடலை கொடுப்பேன்
உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை

அழகே! உன் நிழலிலும் நிஜமாவேன் அன்பே
உலகம் அழிந்தும் நாம் பிறப்போம்
உயிரே! உன் சுவாசத்தில் கலந்திடுவேன் மனதே
காதல் எம்மை ஒன்றனே சொல்லிடுமே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-May-16, 7:23 pm)
பார்வை : 145

மேலே