என் அப்பாவிற்கு சமர்பணம் ...!!!
சரித்திரத்தில் முதல் கவிதை !
முதன்முதலாய் அப்பாவிற்கு !
அப்பா !
நீ கற்றுத்தந்த மொழியில்
உன்னை பற்றியே எழுதுகிறேன் !
பார்பதற்கும் படிபதற்கும்
நீ இல்லாமல் போனது ஏன் ?
நீ பெற நினைத்ததெல்லாம்
நான் பெறவே நீ உழைத்தாய் !
ஆனால் !
அந்த இறைவனின் விளையாட்டை பார்த்தாயா ?
என் வாழ்க்கை துவங்கு முன்னரே
உன் வாழ்கையை முடித்துவிட்டான் !
இது என் வினை பயனோ ?
இல்லை என் விதி பயனோ ?
தெரியவில்லை ! இன்னமும்
பதில் தேடி கொண்டிருகிறேன் !
அகிலமே கூடி எதிர்த்தாலும்
என்னுடன் வரும் ஒருவனும் நீதான் !
தனிமையில் நான் தவிக்கும் பொழுது
துணையாய் வந்த ஒருவனும் நீதான் !
ஆனால் இன்று !
என்னை மட்டும் இந்த போர்களத்தில்
தனித்து போராட விட்டது முறையாகுமா ?
நான் பிறந்த பொழுதும் !
மண்ணில் தவழ்ந்த பொழுதும் !
எழுந்து நடந்த பொழுதும் !
பள்ளி சென்ற பொழுதும் !
உரெல்லாம் என் புகழ்பாடி !
உச்சியில் முத்தமிட்டு
ஊகமளித்தாய் !
என் மகன் ! என் மகன் !
என அனைவரிடத்திலும் அறிமுகம் செய்தாய்!
அதிகாரம் பல உன்னிடத்தே இருந்தும் !
நான் சொல்லும் ஒரு சொல்லுக்கு
மண்டியிட்டு நீ நிற்பாய் !
ஆனால் இன்று !
நான் வெற்றி பல கண்டாலும்
பாராட்ட நாதி இல்லை !
ஆயிரம் முறை சொன்னாலும்
காதுகொடுத்து கேட்பதுக்கொர் ஆளில்லை !
உனக்கு வந்த நோய் - அது
எனக்கு வந்து சேர்ந்திருந்தா !
நீ எப்டியும் என்ன
காப்பாத்தி விட்டிருப்ப !
மாறாக அது உனக்கு வந்து
சேர்ந்ததால !
பல நூறு மயில் தாண்டி
பல தடவ வைத்தியம் பார்த்தும் !
காப்பாற்ற முடியாத பாவி
நான் ஆகி போனேனே !
அப்பா ! அப்பா !
நான் உன்னை நெனைக்காத நாளுமில்லை !
விழிநீர் சிந்தாத நேரமில்லை !
அது மட்டுமா ?
இந்த விஞ்ஞான உலகத்தில்
ஒரு மூடனை போல !
நித்தமும் வேண்டி கொண்டிருகிறேன்
அந்த இறைவனை !
என் பிள்ளையாய்
நீயே வநது பிறக்க வேண்டும் என்று !
விழிகளில் நீருடன் !
உன் மகன் !