யாமறியோம்...

விஷத்தை விஷமுறிக்கும் முன்-
பல்கி பெருகும்...
நச்சுப்பொய்கையின் நடுவே,
சர்ப்பங்கள் சல்லாபித்திருந்த பொழுது-
விடம் திடமானது...
உயிர்த்திரவங்கள் நீர்த்துப்போயின...

எல்லா பாம்புகளுக்கும்,
பித்தன் பிடரியில்,
பரவும் பாக்கியமில்லை...

விஷம் பீறிடும்-
நாகங்களின் நாவுகளில்...
அமுதமூறும் அதிசயத்தினூடே...

அரவங்கள் படம்விரித்தாட,
ஆடல்வல்லானின்-
அபிஷேக தீர்த்தத்தில்,
தாகம் தணித்தவாறு,
முறுவலித்தபடி தானிருக்கிறான்...
முயலகன்.

எழுதியவர் : ரமண பாரதி (20-Jun-11, 8:46 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 389

மேலே