தமிழ் மகள் ஜொலிக்கிறாள்

விளைச்சல் கொழிக்கும்
விருந்துகள் ஆர்ப்பரிக்கும்
திரும்பிய இடமெல்லாம்
பசுமை தலை காடும்

அனல் பறக்கும் அந்தியிலும்
பலம் பிறக்கும் பிஞ்சியிலும்
பழமை இருக்கும் நெஞ்சினிலும்

படிப்பினில் கோட்டை கட்டி
போட்டியினில் கொடியை கட்டி
பரிசுகளும் பட்டங்களும்
பற்பல குவித்து - பகட்டிலா
காழ்புணர்ச்சி இல்லா பல்கலை கழகம்

பண்பாட்டின் பிறப்பிடம்
ஒழுக்கத்தின் வளர்ப்பிடம்
அறிவு ஆற்றலின் அமைவிடம்
அழகுக்கு அழகு சேர்க்கும்
பழம்பெரு அருமை தன்னகத்திடம்

உழைக்கும் வர்க்கத்தின்
ஓயாத கடமைகள்
இரவு பகல் பாராது இங்கிருக்கும்
தன மகள் தானியமாய்
நிறைந்திருக்கும் நிறைகுடம்

புள்ளிகள் இல்லா கோலமாய்
வரையபடாத வண்ணமாய்
மழையும் வந்து போகும்
அமைதியும் காற்றுமாய் அங்கும்
இங்குமாய் இயற்கை எழுந்து நிற்கும்

பல்கலை வல்லுனரும்
பலமுள்ள ஆணினமும்
காண முடியும் காட்சிதனை
மெய்யென மிளிர்ந்து போகும்
மெய்சிலிர்க்க வைக்கும் பெண்ணினமும்









எழுதியவர் : bharathigeologist (21-Jun-11, 2:14 pm)
பார்வை : 396

மேலே