வெய்யிலில்

புருவங்களில்
கவசமிருந்தால் தான்
கண்ணுக்கெட்டும் வரை
பார்வை நீளும்.!

காலன் வடிவெடுத்து
அங்கங்கே கதிரவன்
காட்டி விட்டான்
தன் பங்கை,
வெயிலுக்கு பலி என்று
வேதனையுடன் செய்திகளாம்.

வெட்டப்பட்ட
மரங்களின் ஆவியே
அனலாய் வந்து வந்து
முகத்தில் அறைகிறதோ?

மழையால் துயர்,
ஆற்றின் வழியில் ஆக்கிரமித்ததால்.
இன்று
வெயிலாலும் துயர்,
வேர்களை விட்டு வைக்காததால்.

மரம் வளர்ப்போம்,
இல்லை யெனில்
மட்கிப்போவோம்...!

எழுதியவர் : செல்வமணி (7-May-16, 12:08 am)
Tanglish : veiyilil
பார்வை : 89

மேலே