தாய்ப் பாசம்

தாயின் மடியில்
குழந்தை

தாய்ப் பாலை
சுவைத்துக் கூட்ட

தாய் தலையைக்
கோதி

காலை நீவி
சுகமாக

குழந்தை கண்
உறங்க

தாயும் களைப்பு
மேலாக

கண் அசர
இருவருமே

மணி நேரம்
தெரியாமல்

ஒன்று, இரண்டு மூன்று
மணி நேரமாக

அயர்ச்சியில் ஆழ்ந்து
உறங்க


தாயின் பால் உற்றெடுத்து
முதலில்

சொட்டு சொட்டாக
உதிர

பின் வேகம் எடுத்து
கூடுதலாக கொட்ட

தாய் ஈரம்
அறிந்தவுடன்

எழுந்து தன்னை
நேர் செய்து


குழந்தையை வாரி
எடுதது


பாலைப் புகட்டி
மகிழ



எப்படி வந்தது?
முயற்ச்சியே இல்லாமல்


எவ்வாறு அந்த
அமிர்தம் சொட்டியது?


மணி தவறாமல்
கச்சித்மான் நேரத்திலே


பரவசமானேன் கூடவே
தேடினேன் ஏதென்று ?



ஆழ்ந்தேன் சிந்தனையில்
தொனித்த கரு


யாவற்றிற்கும் மேலாக
ஓரு சக்தி, ஒரு பொருள்

கேளுங்கள் எந்த
மருத்துவரிடமோ?

அலசுங்கள் எல்லா
வலைதளங்களிலும் .

ஓடுங்கள் மேல்நாட்டு
விஞ்ஞானிகளிடம்


கிடைப்பது என்னவோ
ஒரு பொருந்தாத பதில்

இதனாலோ, அதனாலோ
என்று இழுக்கும் குரல்கள்


சொல்லிவிடுவாள்
ஒரு பெண்.

இது தான் பாசம்
தாய்ப் பாசம் -
அதி அற்புதம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (7-May-16, 8:43 am)
பார்வை : 1789

மேலே