சாதனை
தாய் தந்தையைச் சுற்றி
கண்டான் உலகத்தை
ஆனைமுகத்தான்.
சிலுவையில் அறையப்பட்டு
முக்தி அடைந்தான்
இயேசு.
போதி மரத்தடியில்
ஞானத்தை அறிந்தான்
புத்தன்.
ஈற்றடியில் உலகளாவிய
வாழ்வியல் முறைகளை
எழுதினான் வள்ளுவன்.
சோதனை யாவருக்குமே
எடுத்தாளும் விதமே
சாதனை.
வேதனை எல்லாருக்குமே
காணும் விதமே
சாதனை.
கையில் உள்ளது கோடி
அணுகும் முறையே
சாதனை.
இருப்பதிலே மகிழ்வு
காணும் நெறியே
சாதனை.
.