உழவர்

உழவன் மனிதன்

உயர்ந்த மனிதன்

மண்ணைத் தாயாய்

தந்தையாய், தெய்வமாய்

போற்றி தொழுபவன்


ஏறும், கலப்பையும்

காளையும் அவன்

வாழ்வை ஏத்திடும்,

காத்திடும் பொக்கிஷங்கள்

இன்றைய நாளில்

மின்சார பம்பு செட்டும்

காளை இன்றி

ட்ராக்டர் வண்டியும் போல் .



மேகங்கள் தருவன

மழைத் துளிகள்

உழவன் நெற்றி

சிந்திடும் உழைப்பாம்

வியர்வைத் துளிகள்

மழைத் துளிகள்

மண்ணை நனைக்கும்

உழவன் சிந்தும்

வியர்வைத் துளிகள்

உழைப்பாம் உரமாம் !



உழவர் பெருமக்கள்

வேளாண் பெருமக்கள்

மண்ணின் பசி போக்கி

நம்மை வாழ வைப்பவர்

விருந்தோம்பி இன்புறுவர்



உழவன் கை பட்டால்

புஞ்சை நிலமும்

நன்ஜையாய் மாறும்

பின்னே அந்த

வயல் வெளிகள்

தங்க வயல்களே !


அன்று உழவரை

அரசனும் மதித்தான்

குடிகளும் போற்றி

வாழ்த்தி மகிழ்ந்தனர்

இன்றோ உழவர்கள்

பெரும் பணமுடைய

வீணர்கள் கையில்

சிக்குண்டு நொந்து

நூலாய் அலைகின்றனர்

அவர்கள் நன்னிலங்கள்

வேகமாய் வளரும்

நகரங்களுக்கு இறை!

நெல்லும் கரும்பும்

அந்நிலங்களில் இன்றில்லை

மாறாய் அவை

'ப்லாடுக்களாய்' மாறிவிட்டன

இன்றைய உழவர் தலைமுறை

நகரத்து நாகரிகம் வேண்டி

தலைமுறை தலைமுறையாய் வந்த

பயிர் நிலங்களை

சற்றும் சிந்திக்காது

விற்று நகரத்து

நால் மாடி கட்டிடத்தில்

குடியும் புகுந்தனரே !


இந்த நிலை தொடர்ந்தால்

சுற்றுப்புறத்தில் பசுமை

காணமல் போய்விடும் !

நெல்லிற்கும், கரும்பிற்கும்

மற்ற காய் கனிகளுக்கும்

இறக்குமதி நோக்கி

அரசும் செல்லும் ; இந்த

அவல நிலை வராமல்

தடுத்திடுவோமா , விழித்திடுவீர்

என்னருமை வாலிபரே

உழும் மண்ணைக் காத்திடுவீர்

உழவைக் காத்திடுவீர்

உழவர் பெருமக்களை

போற்றி காத்திடுவீர்

அவர் தம் இன்னல்களை

போக்கி காத்திடுவீர் ஏனெனில்

இவுலகிற்கு என்றும்

உழு நிலம் வேண்டும்

பயிர்கள் தழைத்து வளரவேண்டும்

பசுமைத் தரும் சுற்றுப் புறமும் வேண்டும்

உழவர் வேண்டும் உழவும் வேண்டும்

வாழ்க உழவர் வளர்க உழவு..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-May-16, 5:16 pm)
Tanglish : uzhavar
பார்வை : 143

மேலே