வாழ்க்கை
ஏங்க உங்க அப்பாவுக்கு வேற வேலையே இல்லையா ,எப்போ பாத்தாலும் ஏதோ ஒன்ன கேட்டுட்டு வயசான காலத்துல இது நம்ம உயிர வாங்குது ,முதல்ல இத எங்கயாவது ஒரு ஆசரமத்துல விட்டுட்டு வாங்க அப்போதா நாம நிம்மதியா இருக்க முடியும் னு பெரிய மர்மகள் காலைல இருந்து ஒரே புலம்பல் இது ஒன்றும் புதுதல்ல இத தினமும் கேட்குறது தான் ,
இத தினமும் கேட்டு கேட்டு வேதனையில் நொந்தே விட்டார் ராமசாமி, ராமசாமியின்
மனைவி சமீபத்தில் தான் இறந்து போனாள்,
ராமசாமிக்கு இரண்டு பசங்கள் பெரிய பையனின் பெயர் பூபதி சின்ன பையனின் பெயர் கனேசன்,
இருவருக்குமே திருமணமாகிவிட்டது பெரிய பையனுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை ,சின்ன பையன் கனேஷனுக்கு திருமணாகி நான்கு வருடங்கள் ஆகிறது,கனேஷனுக்கு இரு குழந்தைகள் ஒன்று ஆண் ,மற்றொன்று பெண்,
பெரிய மர்மகள் ஏசுவதை கேட்டு கேட்டு மனமுடைந்த ராமசாமி ,ஒரு ஆறுதலக்காகவாவது சின்ன பையன் வீட்டுக்கு சென்று வரலாம் என்று புறப்பட்டார் ,
இத்தனை நேரமாகியும் பேருந்து வரவேயில்லை இன்று என்று பார்த்து பேருந்து வர இத்தனை தாமதம் கடும் வெயில் வேறு ஆட்டோவில் செல்லலாம் எனறால் மகன் அதற்கும் கூட மனசாட்சியில்லாமல் கணக்கு கேட்பான் ,சிறு வயதில்
தன் மகன்களை படிக்க வைக்க அவர்களது தேவைகளணைத்தையும் பூர்த்தி செய்ய கணக்கில்லாமல் செலவு செய்தார் ,தனது மகன்களை அப்படி வளர்ததார் அதை சொன்னால் கண்ணில் கண்ணீரே வந்து விடும் ,
தூரத்தில் ஒரு பேருந்து வந்தது அதையும் பத்தடி தள்ளியே நிருத்தினான் ஓட்டுனர் ,ஒடி சென்று ஏறுவதற்குள் பேருந்தை எடுத்து விட்டான் ,மூச்சு வாங்கியது,
ஒரு வழியாக அடுத்ததொரு பேருந்து வந்தது அதில் ஏறினார் , டிக்கெட் வாங்க நூறு ரூபாய் நோட்டை நீட்டினார் , யோய் உனக்கு அறிவில்ல நூறு ரூபாய
நீட்டுரியே நான் என்ன உட்காந்து சில்லறையா அடிச்சிட்டிருக்க சில்லறை இருந்தா டிக்கெட் எடு இல்லாட்டி வர ஸ்டாப்ல இறங்கீக்க என்று கடுங்கோபத்தோடு நடத்துனர் நடந்து கொண்டார் ,
தம்பி ,என்னை பாதிலேயே இறக்கி விட்டா நா என்ன பன்னுவே கோச்சுக்காம மரவூர் க்கு ஒரு டிக்கெட் கொடுப்பா என்று பரிதாபமாக கெஞ்சினார் , சரி,இந்தா டிக்கட் ,சில்லறை இப்ப இல்ல வந்தா கொடுக்குற
னு கூறி டிக்கட்டை கொடுத்து விட்டு நூறு ரூபாயை பெற்றுக் கொண்டார் ,
பேருந்து வேகமாக செல்ல மரவூர் பக்கத்தில் வந்தது , நடத்துனரிடம் மீதி சில்லறை கேட்க பேருந்து மரவூரில் நின்றது ,மறுபடியும் நடத்துனரிடம் மீதி சில்லறையை கேட்க, நடத்துனர் ,சில்லறை எல்லாம் ஒன்னுமில்ல நீ மரியாதையா இறங்குலீனா உன்ன அடுத்த இரண்டு ஸ்டாப் தள்ளி கொண்டு போய் விட்டுடுவனு நடத்துனர் மிரட்ட ,ராமசாமிக்கு வேதனையில் நெஞ்சு வலியே வந்திடும் போலும் வேறு வலியில்லாமல் நெஞ்சை பிடித்துக் கொண்டே இறங்கினார் ராமசாமி,
ஒரு வழியாக பேருந்து நிறுத்தத்லிருந்து தன் சின்ன பையன் வீட்டிற்கு நடந்தே வந்து வி்ட்டார்,தன் பேர பிள்ளைகளுக்கு எதாவது வாங்கி செல்லலாம் என்றால் கையில் இருந்த பணம் அத்தனையும் அந்த நடத்துனரே பிடுங்கி விட்டான் , திரும்பி ஊருக்கு போகலாம் என்றால் கூட, தனது மகன் கனேஷன் பணம் கொடுத்தால் மட்டுமே,
அப்படியே மெல்ல நடந்தார் மகன் கனேஷனின் வீடு வந்தது , வீட்டின் முன்பு கார்கள் எல்லாம் நின்று கொண்டிருந்தது,மர்மகள் வீட்டிலிருந்து உறவினர்கள் வந்திருப்பார்கள் போலும்,
மெல்ல வீட்டின் உள்ளே நுழைந்தார் , தனது தந்தையை கண்ட கனேசன் ,ஏ இங்க வந்தீங்க ,இப்ப எதுக்கு இங்க வந தீங்க , என்று தந்தையிடம் கடிந்து கொண்டான் ,
என்னைப் பார்க்க என் ஆபிஸிலிருந்து என் நண்பர்கள் வந்திருக்காங்க ,அவங்க போனதுக்கு அப்புறம் உள்ள வாங்க ,அது வறைக்கும் வெளிய ஓரமா நில்லுங்க என்றான் , இதை கேட்ட அவர் அழுதே விட்டார் ,
நண்பர்கள் எல்லாம் சென்ற பிறகு உள்ளே நுழைந்தார் , நீ எப்படி இருக்க குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க மர்மகள் எப்படி இருக்கா என்று ராமசாமி நலம் விசாரிக்க , கனேஷ் அனைவரும் நலமாக இருப்பதாக கூறினான் ,
, உன் அண்ணன் வீட்டில் கொஞ்சம் சண்டை ,அதான் கொஞ்சம் நாள் இங்க தங்கீட்டு போலாம் னு வந்திருக்கேன் என்றார்,
அதற்கு கனேஷன் ,நீங்கள் இங்கே எல்லாம் தங்க முடியாது, நாங்க ஊட்டிக்கு டூர் போறோம் நீங்க திரும்பி வீட்டுக்கே போயிடுங்க என்றான், வேதனை மிக்க பதில் ,
குழந்தைகைளயாவது கூப்பிடு பார்த்துட்டு போயிடுறேன் என்றார்
அவள்,குழந்தைகள் ,எல்லாம் அவங்க ஊர்ல இருக்காங்க நானும் இப்போ அங்க போறக்குத் தான் கிழம்புற,அங்கிருந்து நாங்க கார்ல ஊட்டிக்கு போய்டுவோம்,நீங்க முதல்ல கிழம்புங்க என்று தந்தையை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான் கனேஷன்
நான் வரும் போது என்று ஆரம்பித்து ராமசாமி நடந்ததையெல்லாம் கூறி திரும்பி செல்ல பணம் கொஞ்சம் கூட கையில் இல்லை என்று கூறி தன் மகனிடமே பணத்திற்கு கையேந்தி நின்றார்
ஏதோ ஒரு பிச்சைக்காரனுக்கு போடுவதை போல கொஞ்சம் பணத்தை கொடுத்து தாட்டி விட்டான்
இது எல்லாம் ராமசாமிக்கு பெரும் வேதனையை தந்தது ,ஒரு அடிமையை போல உணர்ந்தார் , தினம் தினம் இப்படி அவமானப்பட்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா என புலம்பியழுத படியே ,பேருந்தில் ஏறிக் கொண்டார் , தனது பெரிய பையன் பூபதியின் வீட்டிற்கு திரும்பி செல்ல
பேருந்தில் செல்லும் போது தனக்கு நடந்த திருமணம்,சிறு வயது வாழ்க்கை ,தன் மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாக இருந்த இன்பத் தருணங்களை வேதனையோடு எண்ணிய படியே தனது பையன் பூபதியின் வீட்டை வந்தடைந்தார்
-விக்னேஷ்