பழங்கள் உண்டால் கூட உங்கள் பற்களை பாதிக்குமா

பொதுவா இனிப்பு வகை உணவுகளை சாப்பிட்டால் பற்கள் பாதிக்கும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் நாம் தீங்கில்லை என்று நினைத்து சாப்பிடும் உணவு வகைகள் நம் பற்களை பாதிக்கின்றன. இவ்வகை உணவுகளில் சில

பாஸ்தா ஸாஸ்:

பாஸ்தா ஸாஸ் இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த ஸாசில் தக்காளி அதிகம் சேர்க்கப்படுகிறது. தக்காளியில் அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளதால் அதனை அதிகமாக உட்கொள்ளும்போது, பற்களை பாதிக்கும். மேலும் அதில் நிறத்தினைக் கொடுக்கும் பொருட்கள் சேர்ப்பதால் அவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, பற்களில் கரையை ஏற்படுத்திவிடும்.

பீநட் பட்டர்:

பீநட் பட்டர்களில் அதிக அளவு சர்க்கரை சேர்ப்பதால், பற்களில் பேக்டீரியா ஏற்பட வாய்ப்புள்ளது. அவை பற்களில் ஒட்டிக் கொள்ளும். எளிதில் போகாது. நாளடைவில் பற்சிதைவிற்கு இந்த பீநட் பட்டர் காரணமாகும்.

ஆப்பிள் :

ஆப்பிள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது என உங்களுக்கு தெரியும். ஆனால் ஆப்பிள் அமிலத்தன்மை கொண்டது. அவை பற்களின் எனாமலை பாதிக்கும். ஆகவே ஆப்பிள் சாப்பிட்டதும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஊறுகாய் :

கடைகளில் விற்கும் ஊறுகாய் பேக்குகளில் கெடாமல் இருப்பதற்காக, வினிகர் மற்றும் பிரசர்வேட்டிவ் சேர்க்கிறார்கள்.அவை பற்களிலுள்ள எனாமலைப் போக்கும். பல்கூச்சத்தையும் ஏற்படுத்தும். ஆகவே ஊறுகாய் சாப்பிட்டபின் நிறைய நீர் குடித்தால் ,பல் கூச்சம் வருவதை தடுக்கலாம்.

இருமல் நிவாரணிகள்:

இனிப்பு வகைக்குதான் பற்கள் பாதிக்க வேண்டும் என்பதில்லை. நாம் இருமலுக்கு எடுத்துக் கொள்ளும் டானிக்கினாலும் பற்கள் பாதிப்பு அடைகிறது என தெரிய வந்துள்ளது.

நிறமுள்ள பழங்கள் :

அதிக நிறமுள்ள பழங்களும் ஒருவகையில் பற்கள் பாதிப்படைய காரணமாகின்றன என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம். மாதுளை,கருப்பு திராட்சை, செர்ரி பழங்கள்,பெர்ரி வகைப் பழங்கள் ஆகியவை உங்கள் பற்களில் கரையை ஏற்படுத்துகின்றன.

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (11-May-16, 7:33 pm)
பார்வை : 68

மேலே