நம்பினால் நம்புங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

* எறும்புகளால் மைக்ரோவேவ் சாதனத்துக்குள் உயிர் பிழைத்து இருக்க முடியும். அக்கதிர்களை ஏமாற்றுகிற அளவு அவை சிறியதாக இருப்பதே காரணம்!

* நாம் உறங்கும்போது கிட்டத்தட்ட 450 கிராம் அளவுக்கு நம் உடல் எடை குறைகிறது. மூச்சு விடுதல் காரணமாக!

* சீனா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு மூளையை விசேஷ உணவாக உட்கொள்கிறவர்கள் உண்டு!

* மனிதகுலத்தை அழித்ததில் கொசுக்களுக்கு இணையான உயிரினம் வேறு ஒன்றும் கிடையாது!

* ஹிட்லர் வதை முகாம்களில் இருந்து விடுதலையான சிலர், முதல் வாரத்திலேயே இறந்து போனார்கள். அளவுக்கு அதிகமான சாக்லெட் மற்றும் மிட்டாய்களை மகிழ்வின் மிகுதியில் தின்றதே காரணம்.

* நாசா விண்வெளியாளர் பயிற்சிக்கு 2015ல் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 0.08 சதவீதம் மட்டுமே தகுதியுடையதாக இருந்தது.

* காபி அருந்தும்போது, காஃபீன் ரத்தத்தில் கலப்பது போலவே, விந்தணுக்களோடும் சேர்கிறது.

* 1891ம் ஆண்டில் அர்ஜென்டினா காவல் துறையில்தான் முதன்முதலில் கிரிமினல்களின் கைரேகை அடையாளம் பதிவுசெய்யப்பட்டது.

* ஹாலிவுட் நடிகர் வின் டீசல் இதுவரை தன் தந்தையை சந்தித்ததே கிடையாது. தான் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்குத் தெரியாது.

* விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்புக்கும் 70 சதவிகித நீர் செலவழிக்கப்படுகிறது.

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (11-May-16, 7:32 pm)
Tanglish : nampinaal nambungal
பார்வை : 106

மேலே