ROOM- சினிமா ஒரு பார்வை

ROOM- சினிமா ஒரு பார்வை

"மாயத்தோற்றங்களோ...." என்று சந்தேகப் பட வைக்கும்.... கேள்விகளையே..... அந்தக் குழந்தை படம் நெடுக வீசிக் கொண்டே செல்கிறது....7 வருடங்களாக ஒரு பெண்ணை ஒரு செட்டில் போட்டு அடைத்து வைத்து வன்கலவி செய்கிறான்... ஒருவன்.... அதன் விளைவாக ஒரு குழந்தையும் பிறக்கிறது.... அவளும் அந்த வாழ்விற்கு தன்னை ஒரு வழியாக பொருத்திக் கொள்கிறாள்.. .. அந்தக் குழந்தை மட்டுமே அவளின் நம்பிக்கையாகி போகிறது... அந்த குழந்தையோ.. அந்த அறைக்குள் இருக்கும்... ஜடப் பொருள்கள் மட்டுமே... உலகம் என்று நம்புகிறது... நிழலை நிஜம் என்றே உள் வாங்குகிறது......

பிறந்ததில் இருந்தே ஒரே அறைக்குள் இருப்பதால் அந்த அறை மட்டுமே உலகம் என்று நம்புகிறது...ஒரு வழியாக அந்த குழந்தை மூலமாக அவள் தப்பித்து வெளியேறுகிறாள்... காவல் துறை உதவியுடன்.. தன் பெற்றோர்களிடம் வந்து சேர்கிறாள்.. ஆனால் அதன் பிறகு தான் படத்தின் நுட்பங்கள் வெளிப்படுகின்றன...நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வேறுபாட்டால் அந்த குழந்தை தனக்கான புரிதலின் மென் மௌனத்துக்குள் ஒரு புதிய வார்ப்பு போல.. மாறுகிறது.. பின் சகஜ நிலைக்கு மெல்ல மெல்ல திரும்புகிறது... கதை நாயகி கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள்..அவளின் கனவுகள் எங்கோ தூரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது போல உணருகிறாள்... தன்னை 7 ஆண்டுகள் கொடுமை படுத்தியவனின் குழந்தையை தன் வாழ்வின் நம்பிக்கையாக பார்க்கும் முரணோடு.. படம் முடிகிறது...

பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றெல்லாம் கூற முடியவில்லை.... ஆனாலும்.. ஒரு நிழலுக்குள் மாட்டிக் கொண்ட நிஜம் தன்னை நிரூபிக்க எத்தனை போராட வேண்டியுள்ளது... வானத்தில் பறக்க தான் பறவைகள்.. என்ற போது... வேடனின்.. குறிகள்.. எதை காட்டுகின்றன... போன்ற கேள்விகளை மெல்ல மெல்ல ஒரு மென் நீரோடையாய் தூவிக் கொண்டே செல்வதில்.. மனக் கரையெங்கும்... .. தனிமை.... தனிமை.. என்று நீந்தி கொண்டே செல்லும்.. ஒரு அம்மா மீனும்.. குட்டி மீனும்... கதையை மீண்டும் நினைவு படுத்தி பார்க்கும் இறுதி காட்சியில் அவர்கள் அடை பட்டுக் கிடந்த அறையை மீண்டும் பார்க்க வருகிறார்கள்.... அது இனம் புரியாத உந்துதலை எனக்கு தந்தது... உங்களுக்கும் தரலாம்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-May-16, 4:45 pm)
பார்வை : 127

மேலே