ஒரு நிமிடக்கதை - MLM கம்பெனி

இந்த MLM கம்பெனிங்க இருக்கே,

அதுல சேர்ந்தஒடனே நம்ம நண்பர்கள் வந்து நிக்கிற எடம் நம்ம வீடுதான்.

"மாப்ள பேசாம இதுல சேர்ந்துரு டா.
கன்னாபின்னான்னு சம்பாதிக்கலாம்" அப்படீன்னு உசுப்புவாங்க.

( கொஞ்சநாள் நானும் இன்சூரன்ஸ் ஏஜன்ட்டா மாறி பலபேரை ஓடவிட்டது தனிக்கதை )

அவன் தொல்லை தாங்கலியேன்னு ஒரு ஞாயித்துக்கெழமை சாயங்காலமா அவன் கூட போயிதான் வைப்பமேன்னு போனேன்.

சிட்டிலயே பெரிய ஹோட்டல்ல, ஏசி ஹால்லதான் மீட்டிங் நடக்கும்.

அங்க கோட்டுசூட்டுல நடமாடுறவனுங்களை எல்லாம் பார்த்தா அம்பானியோட அண்ணந்தம்பி மாதிறியே இருக்கும்.

டீ பிஸ்கட்டு வாட்டர் பாட்டிலா பறக்கும்.

கூடவே கம்பெனியோட விளம்பர பேப்பர்களும் வினியோகமாகும்.
அதுல கிட்டத்தட்ட உலகம்பூரா அந்த கம்பெனி கிளைகளிருக்கும்னு போட்டிருக்கும்.

மேடைமேல மைக்கோட ஒரு ஆளு வந்து நம்மளுக்கு எத்தனைக்கோடி சம்பாதிக்க விருப்பம்னு கேட்டுட்டு, ஒரே வருஷத்துல டாட்டா பிர்லாவை விட அதிகமா பணம் பண்ணிடலாம்னு சத்தியம் பண்ணுவாரு.

அதுவும் எப்படி, ஒரு போர்டு வச்சு கணக்குப்போட்டு, படம் வரைஞ்சு பாகம்லாம் குறிச்சு லாஜிக்கா விளக்கம் குடுப்பாரு.

அதுக்கப்புறம் கொஞ்சம் பேரு, ஆளாளுக்கு மைக்கை வச்சுகிட்டு,
"நான் இந்த வருஷம் சேர்ந்தேன். இத்தனைகோடி சம்பாதிச்சேன்" னு,
நாம நம்புற மாதிறியே சொல்லுவானுங்க.

இதுக்குள்ள இருட்டிப்போயி எல்லாருக்கும் பசிக்க ஆரம்பிக்கிற நேரத்துல,
வியாபாரத்தைத் தொடங்குவாங்க.

சேந்தா நமக்கு சோப்பு சீப்பு கண்ணாடியும், நம்மமாதிரியே யாரையாச்சும் இழுத்து உள்ள விட்டா அதுக்கு தனியா கமிஷனும் கெடைக்கும்.

கட்டக்கடைசியா நண்பன் எங்கிட்ட வந்துசேர்ந்தான். "மாப்ள இன்னிக்கு நாள் நல்லாருக்கு டா ஜாயின் பண்ணிக்கோ" என்றான்.

நான் ஒடனே, "மச்சி நீயே இப்போத்தான்ட ஜாயின் பண்ணிருக்க. மொதல்ல நீ நிறைய சம்பாதி. உன்னைப்பார்த்துட்டு அப்புறமா நான் சேர்ந்துக்குறேன்னேன்" ( நாங்கல்லாம் உஷாருல்லா )

அவனும் விடாப்பிடியா, " இல்லடா இப்போ விட்டுட்டா பல லட்சம் மிஸ்பண்ணிடுவடா" ன்னான்.

நான் சிக்கவேயில்ல.

இப்போ பழையபடி பெயின்ட்டிங் வேலைக்குத்தான் போயிகிட்டிருக்கான்னு கேள்விப்பட்டேன்..

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (11-May-16, 11:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 238

மேலே