12 பிவி இறுதி பாகம்- 10

வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கு, கதையாய் நடந்தவைகளை பிவி சொன்னாள். நடித்துக் காட்டினாள். அம்மா ஒவ்வொரு முறையும் அவளைக் கட்டிக் கொண்டு கண்ணில் நீர் விட்டாள். போதும் போதும்... என்னை பயமுறுத்தாதே. என்றாள். அப்பாவுக்கோ தன் மகளின் வீர சாகசம் கேட்க இனிமையாய் இருந்தது. மேலும் மேலும் ஏதேதோ கேள்வி கேட்டு கேட்டு அவளை பேச வைத்தார்.

ரவி சார் வீட்டிற்க்கு வந்தார். கையில் செய்தித்தாளோடு வந்தார். பிவிக்கு கை கொடுத்தார் ‘கண்க்ராட்டுலேசன்ஸ்’ என்றார். ‘யுவர் நேம் ஸ் ரெக்கமண்டட் போர் ராஷ்ட்ரபதி அவார்ட்’. என்று பெருமை பூரிக்க சொன்னார். சீதல்கஞ்சில் நடந்தவைகளை போலீஸ் துப்பு துலக்கியதில் பெரிய திருட்டையும் வெளிநாட்டு தொடர்புடைய தேச துரோக செயல்களும் வெளிச்சத்துக்கு வந்தது என்றார். ப்ரியம்வதாவின் வீர தீர் செயலுக்காக ஜனாதிபதி அவார்டுக்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது என்றும் கூறினார்.

செய்தித் தாளை பிரித்து ரவி சார் படிக்க ஆரம்பித்தார். பிவி தன் அம்மா அப்பாவுடன் ரவி சார் படிக்கபடிக்க செய்திகளைக் கேட்டு வியந்துப் போனாள். இப்படியும் நடக்குமா என்று தன்னைத்தானே வினவிக் கொண்டாள்.

சீதல்கஞ் சுடுகாட்டில் ஒரு வைர தொழிற்சாலையே இயங்கி வந்திருக்கிறது. மனித உடலில் மொத்தமாக கால்சியம், சல்ப்ஹட் மற்றும் கார்போனட் உள்ளது. இவை இறந்தபின் எரிக்கும்போது சாம்பலாய் கருகும். ஒரு மனிதனின் உடல் எரிந்தபின் 2 கிலோ சாம்பல் கிடைக்கும். அதில் உள்ள கார்போநட்டை மட்டும் பிரித்து எடுத்து கம்ப்ரெஸ் செய்தால் கிட்டத்தட்ட ஒரு காரட் தூய்மையான வைரம் கிடைக்குமாம். இதை “க்ரேமாசன் டைமண்ட்ஸ்” ( CREMATION DIAMONDS ) என்று சொல்வார்கள். இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம். அதற்கான தொழிற்சாலை சீத்தல்கஞ்சில் அமெரிக்காவை சேர்ந்தவர் ஒருவர் நடத்தி வருகிறார். பல சோதனைகளை அவர் செய்து வருகிறார். இங்கே கிடைக்கும் சில மூலிகையை சேர்ப்பதால் வைரம் தூய்மையாக கிடைக்கிறதாம். அந்த சாம்பலில் இன்னும் ஈயம், வெள்ளி, லிதியம், செலேனியும் என்று ஏகப்பட்ட உலோக தாதுக்கள் இருக்கிறதாம். சட்டசிக்கலில் சிக்காமல் இருக்க சுற்றுலா பயணிகளை மட்டுமே குறி வைத்து பிடிக்கிறது அந்த கும்பல்.

நம் நாட்டில் தான் இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் இருப்பதால் தொழிற்சாலையை இங்கேயே நிறுவியதாகவும் அந்த அமெரிக்கர் சொன்னாராம். சிறு வயதில் அவர் அன்பு மனைவி இறந்தபோது அவளை எரித்து அந்த சாம்பலை வைத்து பரிசோதனைகள் செய்து அதை கம்ப்ரெஸ் செய்து ஒரு வைரமாய் மாற்றியதாகவும் அந்த வைரத்தை மோதிரமாக அணிந்திருப் பதாகவும் அந்த வெளிநாட்டவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.

இப்போது அவர்கள் செய்யும் சோதனைக்கு ஒரு பன்னிரண்டு வயதுக்குள் முழு வளர்ச்சியடையாத எலும்புகளால் ஆனா ஒருவர் தேவையாய் இருந்ததால் அவர்கள் முதலில் மேக்னாவை கடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவள் உடற்கூறு சோதனைக்கு சரி வராததால் அவளை கொல்லாமல் விட்டுவிட்டனர். ஊமையாய் ஆனதால் அந்த பெண்ணுக்கு தன் ஊர் பேர் சொல்லத் தெரியவில்லை. டான்ஸ் ட்ரூப் குண்டு பெண்மணிக்கு மகளாய் அவளை வைத்துக் கொண்டனர். தினமும் குடிக்க ஏதோ மயக்க மதுபானம் குடுத்து அதில் அவள் பழயதை மறந்தே போயிருந்தாள். தன் தந்தையை பார்த்தும் கூட அவளால் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை.

பிவி அன்று அந்த பெண்மணி தனக்கு குடுத்த அதே பானம் தானோ என்று நினைத்தாள். அதை குடித்திருந்தால் தானும் இன்னொரு மேக்னாவாய் அங்கேயே இருந்திருப்போமோ என்று நினைக்கையில் அவள் வயிறு பெரண்டது கண் விரிந்தது. தப்பித்தோம் என்று நினைத்தாள். அம்மாவை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள் ப்ரியம்வதா என்கிற பன்னிரண்டு வயது நிரம்பிய வீரதீர சுட்டி பெண் பிவி.

முற்றும்.

எழுதியவர் : சுபா சுந்தர் (12-May-16, 5:41 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 123

மேலே