10 செகண்ட் கதைகள் - ஒரு_குண்டுமணி_கிடையாதுடி_உனக்கு
சண்டையிட்டு பேசாமலிருந்தாலும், "உங்கப்பாவை டீ எடுத்துக்கச் சொல்லுடா" என்று மகனிடம் சொல்லிக்கொண்டே தேநீர் கோப்பையை அருகில் வைத்து விட்டுச் செல்லும் அவள் கைகளுக்கு, ஆறு பவுனில் வளையல் வாங்கிக் கொடுத்தாலும் தகும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, "சக்கரை வேணும்னா எந்திரிச்சுப்போயி போட்டுக்கச் சொல்லுடா"ன்னு சவுண்ட் வருது.