!!!என் பாதுகாவலன்!!!
என் பாதுகாப்பில்
பெரும் பங்கு வகிக்கும்
அவன் என் பாதுகாவகன்....
என் பாதுகாப்பதில்
அவன் முதன்மை
பொறுப்பேற்று
முக்கியமானவனாய்
திகழ்கிறான்....
என் பாதுகாப்பு
சட்டத்தில் அவன்
தீர்ப்பளிக்கும்
நீதிபதியாகிறான்....
என் விருப்பபடியே
என்னை பாதுகாப்பதில்
அவனுக்கு விருப்பம்....
கடும் சொற்களால்
கசிந்து விடாதவன்....
கரடுமுரடான
காட்டுப் பாதையிலும்
கடும் வெயிலிலும்
தன்னுயிர் தந்து
என்னை காப்பவன்....
எட்டி உதைத்தாலும்
மிதித்து துவைத்தாலும்
எனக்காகவே வாழ்பவன்....
என்னால் அவன்
அவமதிக்க பட்டாலும்
என் பாதுகாப்பில்
முழுகவனம்
செலுத்துபவன்....
என்னை ஒரு
சுமையாக என்னி
அவன் எப்பொழுதும்
கடிந்து கொண்டதில்லை.....
என் எல்லா
உறவுகளையும்விட
அவன் ஒருபடி
உயர்ந்தவன்....
என் வலிகளை
உணர்ந்தவன்'.
என் பயணத்தின்
நீளத்தையும் அதன்
நோக்கத்தையும்
அறிந்தவன்....
அவன்
என்ன ஜாதியோ?
வீட்டிற்குள்
வரவேண்டாம் என்று
ஒதுக்கிவிட்டு சென்றாலும்
மனம் நோகாமல்
முகம் கோணாமல்
மகிழ்ச்சியோடு
காத்திருப்பான் நான்
திரும்பி
வரும்வரை....
''என் கால் செருப்பு''