அகரத்தின் முதல்வனாய் - பூவிதழ்

அகரத்தின் முதல்வனாய்
ழ கரத்தின் இயல்பினனாய்
என்சிகரத்தின் முதற்படியே
நான் எழுத்து நடைபயில கைபிடித்து கற்பித்தாய்
நான் பேச்சுநடை பயில சொற்களை பிறப்பித்தாய்
என்னை இயற்றினாய் , போற்றினாய் , மாற்றினாய்
என்று இங்கு நான் என்பது உந்தன் பிம்பமே
என்றும் நானும் எனது வெற்றியும் உந்தன் சொந்தமே
கற்றபாடம் மறந்தபோதும் கண்ணில் தெரிவாய்
காற்றில் வரைந்த ஓவியமாய் !

எழுதியவர் : பூவிதழ் (12-May-16, 4:05 pm)
பார்வை : 632

மேலே