உன்னால் முடியும்

முடியாதென்று எதுவும் இல்லை
முயற்சி எடுத்திடல் முக்கியமே
முடியாதென்று நினைத்து விட்டால்
முழுமை பெறாதுன் லட்சியமே
முடியும் சிந்தனை ஒன்றுபட்டால்
முழு மனதோடு உழைத்திட்டால்
முடிவாய் வெல்வது உன்எண்ணமே
முன்னேற்றம் கிடைத்திடும் அதுதிண்ணமே

வெற்றி உனக்காய் காத்திருக்கு
வெல்லும் உனைவாழ்த்த தவமிருக்கு
வென்று காட்டிடு மனோபலத்தை
வெற்றி வணங்கட்டும் உன்திடத்தை
வேண்டாம் எதிர்மறை எண்ணங்களே
வெற்றி வீரன்நீ ஜெயிக்கத்தானே
வெல்வது முடியுமென்றால் முடியும்தானே
வெல்வோர்க்கு எதிர்காலம் விடியும்தேனே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 7:57 pm)
Tanglish : unnaal mudiyum
பார்வை : 4960

மேலே