வானம் வசப்படும்
வானமெனும் லட்சியப் பரப்பை அடைய
சிறு சிறு ஏணிகளெனும் முயற்சிகள் செய்வோம்
அதை தொட்டுவிடத்தானே பயிற்சிகள் செய்வோம்
எதிர்மறை சிந்தனைகளை விட்டொழிப்போம்
வெற்றிச் சிந்தனை ஒன்றையே மனதில் வைப்போம்
ஒவ்வொரு படியாய் தான் வெற்றி கிட்டும்
தோல்வியைப் படியாக்க மிக விரைவில் எட்டும்
வென்றவர் யாவரும் நம்மை போல் ஒருவரே
சரியான தருணத்தில் திறமையை வெளிக்காட்டிட்டர்
திறமை எல்லோரிடமும் மிக நிறைந்து உள்ளது
அடையாளம் கண்டு அதனை வெளிக் கொணர்வோம்
ஒவ்வொரு பெரிய வெற்றிக்குப் பின்னும்
உதித்த ஒரு சிறிய சிந்தனை காரணாமாயிருக்கும்
தம்மைத்தானே செதுக்கிய சிற்பிகளே வெற்றியாளர்கள்
கிடைத்திடும் வெற்றி வசப்படும் வானம்
இன்றே அதற்காய் முதலடி எடுத்து வைப்போம்
இருந்திடும் துன்பம் பறந்திடும் ஓடி
ஊதிட அதுவும் காணாமல் போகும் பார்த்திடுவோம்
சிந்தனையில் என்றும் வெற்றியை வைக்க
ஓடி வந்தே நமக்கு கொடுத்திடும் கையை
வானமது தூரமில்லை சிறுபட்டாம்பூச்சிக்கும் இறக்கையே துணை