முதல் முத்தம் முதல்

முதல்
காதல்....
முதல்
முத்தம்.....
நம் மனசில்
மறைந்து
போகாத
யுத்தம்...நித்தம்
நித்தம்
நிகழும்
யுத்தம்....

போதுமென்று
சொல்லி.....
பொய்சொல்லும்
கள்ளி.....
புரிவாளே
புயலென மாறி.....
இன்னும்
பல முத்தம்......

நிகழ்கின்ற
காதல்
யுத்தத்தில்
சேதங்கள்
இல்லை.....
ஆனாலும்
செய்தியாகிறோம்......

சாகிற நொடியிலும்
என்னுயிர்
சொல்லும்......போவது
உயிர் அல்ல
என்னுடல்தான்
என்று....உன்னோடு
நான்கலந்த
வாழ்க்கையின்
பின்பு......

எழுதியவர் : thampu (13-May-16, 3:10 am)
பார்வை : 214

மேலே