மனிதரில் மாணிக்கம் நேரு

அஞ்சாத நெஞ்சம் கொண்டவரே
ஆசிய ஜோதியென திகழ்ந்தவரே
மழலைகள் மனதில் இடம்பிடித்து
மாமாவென எந்நாளும் திகழ்பவரே
பஞ்சசீலக் கொள்கை நீபடைத்து
பார்போற்ற மண்ணில் பேரெடுத்தாய்
அளப்பரும் உயர்ந்த சேவையிலே
அனைவரின் மனதிலும் இடம்பிடித்தாய்
செல்வம் நிறைந்த குடும்பத்தில்
சிறப்பாய் பிறந்தே நீவளர்ந்தாய்
அகிம்சை வேந்தன் அண்ணலுக்கு
அன்புக்கரம் தந்து ஆதரித்தாய்
இந்திய நாட்டின் உயர்விற்கு
இணையற்ற தொண்டும் நீசெய்தாய்
மேடையில் உன்னுரை கேட்டவர்கள்
மிஞ்சிடும் விடுதலை உணர்வடைந்தார்
மேடையில் சிங்கம் போல்முழங்கி
மேல்நாட்டு வெள்ளையரை மிரளவைத்தாய்
சுரண்டிய பரங்கியர் கூட்டத்தினை
சொல்லாமல் கொள்ளாமல் ஓடவைத்தாய்
தியாகம் என்னும் சொல்லுக்கு
திரியாய் எரிந்தே ஒளிதந்தாய்
தொண்டுகள் செய்தே தாய்நாட்டை
தூக்கியே நிறுத்திட உனைதந்தாய்
சுதந்திர இந்திய நாட்டிற்கு
முதன்முதல் பிரதமர் பதவிபெற்றாற்
முன்னேறும் திட்டங்கள் பலதந்து
முறையுடன் நாட்டை நீஆண்டாய்
சாதியும் மதமும் நீவெறுத்தாய்
சாபெமன்றே அதை நீயுரைத்தாய்
மாண்புகள் நிறைந்த மனிதர்களில்
மாணிக்கம் என்றே புகழ்பெற்றாய்.