திருவள்ளுவநாயனார் திருவாய்மலர்ந்த ஞானவெட்டியான்
பாயிரம்
காப்பு
விருத்தம்
அண்டத்திலும்,பிண்டத்திலும் ,வியாபித்திருக்கின்ற பிரமதேவனையும் ,விஷ்ணுவையும் ,
கண்டிக்கப்படாத பரிபூரணத்தின் திருவருளையும் பூவுலகத்தைச் சூழ்ந்திருக்கின்ற சூரிய சந்திரர்களையும் அக்கினிபகவானையும்,இனிய தமிழ்க்கல்விக்குத் தலைமை பூண்டவரான
அகத்தியமுனிவரையும்,அஷ்டதிசைகளும் புகழ்கின்ற என்னுடைய ஞானாசிரிய சுவாமியையும்,இடைகலை,பிங்கலை ,சுழிமுனை இவைகளின் மேலிடமான கமலத்தையும் ,
வேதங்களிலும் ,யோகநூல்களிலும் ,குண்டலியென்று சொல்லப்பட்டு வருகின்ற மூலாதாரத்தில் எழுந்தருளி யிருக்கின்ற வினாயகக்கடவுளையும் அவரது தம்பியாகிய
சுப்ரமணியக்கடவுளுடைய திருவடிகளையும் போற்றி வணங்குகின்றேன்