சமரசம் உலாவும் இடம்

கல்லறைக்
கதவில் ஓர் அறிவிப்பு!
இது சமரசம் உலாவும் இடம்!

வேறெங்குமிருந்து அமைதியை
நாங்கள் வேண்டவில்லை - இங்கே
எப்பொழுதும் அமைதி நிலவுதே!

காசு பணம் என்று எதுவும்
தேவையில்லை எங்களுக்கு - காசு
படைத்தவரெல்லாம் இங்கே அடக்கம்!

நிசப்தம் என்றும்
தேவையில்லை இங்கே – என்றுமே
மயான அமைதிதான்!

நாங்கள் அமைதியாக உறங்கிக்
கொண்டிருக்கிறோம்; உறங்க எங்களுக்கு
மாத்திரைகள் தேவையில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-16, 5:30 pm)
பார்வை : 266

மேலே