தலைஎழுத்து மாறுமா
அன்னை நாட்டில்....
அடிமையானோம் அனைத்தையும் இழந்து..
ஆணவகாரர்களிடம்....
ஆசைகளை துறந்தோம்...
இலவசமொன்றை நம்பி..
இளிச்சவாயனாய் மாறினோம்..
ஈருலகம் எங்கே...
உணவு தந்த மண்ணும்...
உயிரற்று போனது...
ஊரெங்கும் சுற்றியும்...
ஊழல் மட்டும் குறையல என் மண்ணில்...
எண்ணமெல்லாம் மடிந்தது...
எழுத்துக்களும்(பத்திரிக்கை) பொய்யானது...
ஏற்றமென்று நம்பி...
ஏற்றிய ஏணியை(காமராஜர் அய்யா) தட்டிவிட்ட பாவமோ...
ஐம்புலனையும் அடங்கவைத்து. ...
ஒன்றாய் இருந்த மண்ணும்..
ஒட்ட வந்தவர்களால்(சாதி என்ற பெயரில்) துண்டானதே..
ஓட்டமெடுக்க வைக்க...
ஓட்டு என்பதை சிந்தித்து செலுத்திட ..
ஔவையார் வாழ்ந்த மண்ணில்..
தமிழை வாழ வைக்க முடியுமா...
தன்மானம் தொலைத்த தமிழன்...
புது பிறப்பெடுப்பானா...