காவடிச்சிந்து 5

வானமகள் அளித்திடும் கொடை - அதை
வாங்குவதில் நமக்கென்னத் தடை - அந்த
வஞ்சியவள் வாஞ்சையுடன் விஞ்சிநின்று வீசுகின்ற
வேளை-நல்
மாலை



தானமது மழையெனத் தரும் - மண்ணின்
தாகமதைத் தீர்த்திடவே வரும் - அந்தத்
தாயவளின் நேசமதை தூயவளின் பண்பை நீயும்
தேடு - நலம்
பாடு


கவிதையாக்கம் ; திருமதி.மஞ்சுளாரமேஷ்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (13-May-16, 11:31 pm)
பார்வை : 43

மேலே