மதுவை மறக்கலாம்

மதுவை மறந்திடு 
தோழா
சமூதாயத்தில் பல மாற்றங்கள்
நிகழ்த்திடு  தோழா

பொன்னான  உன் மேனியை
புண்ணாக்கும்  ஆக்கும்
மது  வேண்டாம்

புண்ணாக்கி  உன்னை  மண்ணுக்கு
உணவாக  ஆக்கும்
மது  வேண்டாம்

குடி  குடிக்கு  கேடு
விளைவிக்கும்  தோழா
குடியை  மறந்திடு 
தோழா

இளைமையில்  வேகத்தினால்  
மது  தன்னை 
நாடவைக்கும்  தோழா

முதுமையில்  சோகத்தினால்  
மது  உன்னை 
வருந்தவைக்கும்   தோழா

வறுமைக்கு  தோழன்
மது
உயிருக்கு  காலன்
மது

துன்பங்களை துணிச்சலோடு
எதிர்கொள்ளும் மனநிலை
உன்னிடமே உள்ளது.

இன்பங்களை எளிதில் உன்னிடம்
அழைத்து வர ஏணிப்படிகள்
உன்னிடமே உள்ளது.

மனமிருக்கு  தோழா  நீ
நினைத்தால்  இமையம்  மண்டியிட்டு 
கிடக்கும்  தோழா

மனமிருந்தால் மதுவை நீ 
மறக்கலாம் தோழா 
மண்ணிலே  பலசாதனைகள்  நீ
புரிந்திடலாம்  தோழா

                      - ஜீவா நாராயணன்
                         9600579929

எழுதியவர் : ஜீவா நாராயணன் (13-May-16, 11:22 pm)
பார்வை : 110

மேலே