பெண்மை
அக்கினி அபிசேகம் நடத்திடு
உன் தேகத்தை அக்கினியாக மாற்றிடு
சூரியனை போல் ஒளிவீசிடு
பெண்மையை தொட்டுவிட நினைபவரை
சுட்டு எரித்திடு
இனி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தால் சூலத்தை கையில்
எடுத்து சூர சம்காரம் செய்திடு
பெண்மையின் சக்தி எதுவென காட்டிடு
உன்னை நீயே காத்திடு உனக்கு நிகர் எவரும் இல்லை
என்பதை நிலைனட்டிடு
- கோவை உதயன்