பிஞ்சு மனம்

அவள் கேட்டதையெல்லாம்
வாங்கி தந்தேன்
இப்போது
என்னவளை கேட்டு
முரண்டு பிடிக்கிறாள்
என் மூன்று வயது குழந்தை
எப்படி சொல்லி புரிய வைப்பேன்
இறைவனடி சேர்ந்தவளை
எங்கு சென்று காண்பிப்பேன்
அறிந்திலேன் கண்மணி ,,,,!