என் சுவாசம் தடுமாறுதே

உன் நினைவுகள் என்னை துளையிட்டு பல வண்ணக்கொடிகள் அதில் நட வைத்து
அழகாய்பார்த்து சிரிக்கிறாயே இது என்ன என்ன நியாயமோ??
உன் நினைவுகள் எல்லாம் என் இதயத்தில் ஓர் சுவரொட்டி அதில் அனுதினமும்
உன்முகத்தை நான் சிறைப்படுத்தி வாழும் இந்த வாழ்க்கை என்ன என்ன சுகமோ !!!!
ஏனோ தெரியவில்லை தேடி அலைகிறேன் உன் நினைவுகளை ,அது என்னுள்
புதைந்திருப்பதை மறந்துவிட்டு,.காலம் கடந்துச்சென்றாலும் உன் மீதான
என் காதல் என்றும் கரைந்து செல்லாது.பெண்ணே.....